Yenmanam Ponnambalam In Tamil

॥ Yenmanam Ponnambalam Tamil Lyrics ॥

॥ என்மனம் பொன்னம்பலம் ॥
என்மனம் பொன்னம்பலம் அதில்
உனது எழில்ரூபம்
எனது நாவில் உன் திருநாமம்
புண்ய நைவேத்யம் (என்மனம்)

கனவிலும் என் நினைவிலும் தினம் செய்யும் கடமையிலும்
உனதுதீபம் ஒளியைக் காட்டும் கருணையே புரிவாய்
அடியேன் நாடிடும் இனிய தெய்வம் சபரிமலை வாழும்
அகிலாண்டேசுவரன் ஐயன் ஐயன் சரணம் ஐயப்பா (என்மனம்)

பகலிலும் காரிருளிலும் மனக்கோயில் மூடேனே
யுகம் ஓராயிரம் ஆயினும் யான் தொழுது தீரேனே
இனி எனக்கொரு பிறவி வாய்ப்பினும் பூசை முடிப்பேனோ
எளியோர்க்கு நீ மோட்சம் தாராய் தீணரக்ஷகனே (என்மனம்)

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Yenmanam Ponnambalam in TamilEnglish

See Also  1000 Names Of Yamuna Or Kalindi In Tamil