Kandaththil Nanjinai Sumanthathinaal Thiru In Tamil

॥ Kandaththil Nanjinai Sumanthathinaal Thiru Tamil Lyrics ॥

॥ கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் ॥
கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்
ஐயன் கண்டத்தில் மணியினை சுமந்ததினால்
மணிகண்ட‌ சுவாமி ஆனான்
பிண்டத்தில் பாதியை உமையிடம் தந்து அர்த்த‌ நாரியானான்
அந்த‌ ஹரனவன் ஹரியுடன் கலந்ததினாலே ஹரிஹரசுதனானான்

இருமுடி ஏற்று ஏற்று சிரத்தினில் ஏற்று
ஐயனை நெஞ்சில் போற்று போற்று கரம் குவிந்து போற்று
நாளும் கரம் குவித்து போற்று (கண்டத்தில்)

சன்னதி நோக்கி பக்தர்கள் கூட்டம் புறப்படும் திசை எட்டு
அந்த‌ பக்த்ர் கூட்டமும் கூடுவதோ உன் பதினெட்டு படிகட்டு
தவத்திரு பதினெட்டு பதினெட்டு படிக்கட்டு
ஏறுகிறேன் படி ஏறுகிறேன் ஐயன்
உனை நான் காணுகிறேன் காணுகிறேன்
எனது மனம் உனது உடல் பொருளும் உனது
ஐம்பிலனும் உனது ஐயா
அகிலம் உனது அதன் உயிரினங்கள் உனது
பிறவியும் உனது ஐயா

பசியினைப் போக்கிட‌ பசுவினை நோக்கி கன்று வருவதியல்பு
மனப்பசியுள்ள‌ மனிதன் ஐயனைக் காண‌ அருள்வதும் அவனியல்பு
அருள்வதும் ஐயம் அவனியல்பு
முடிவெடுப்போம் இருமுடியெடுப்போம்
முடிவனே என‌ உணர்ந்தெடுப்போம் உணர்ந்தெடுப்போம்
வழிகள் பல‌ நடந்து பம்பை நதி கடந்து
சபரிமலை அடையும் பக்தரே
வீண் ஆசைகளைத் துறந்து ஐயன்வசம் பணிந்து
முக்தியை நாமும் பெருவோமே(கண்டத்தில்)

See Also  Ennappane Ennai Enni In Tamil