Arul Surakkum Ayyane Vaa Vaa Alangara In Tamil

॥ Arul Surakkum Ayyane Vaa Vaa Alangara Tamil Lyrics ॥

॥ அருள் சுரக்கும் ஐயனே வா வா ॥
அருள் சுரக்கும் ஐயனே வா வா!
அலங்கார ரூபனே வா வா!
அனாத ரக்ஷகனே வா வா!
அஹிம்சா மூர்த்தியே வா வா!

ஆனந்த விக்ரஹனே வா வா!
ஆபத்தில் காப்போனே வா வா!
ஆதிசக்தி மகனே வா வா!
எங்கும் நிறைந்தவனே வா வா!

எங்கள் குலதெய்வமே வா வா!
கலியுக வரதனே வா வா!
கருணாகர கடவுளே வா வா!
இரக்கம் மிகுந்தவனே வா வா!

இசையின் இன்பமே வா வா!
கை தூக்கி விடுவோனே வா வா!
சக்தி கொடுப்பவனே வா வா!
இருமுடிப்பிரியனே வா வா!

ஈடிணையற்ற தேவனே வா வா!
சத்ய ஸ்வரூபனே வா வா!
சபரிபீட வாசனே வா வா!
சதகுரு நாதனே வா வா!

சச்சிதானந்த மூர்த்தியே வா வா!
ஐயப்பா தெய்வமே வா வா!
அகிலலோக நாயகனே வா வா!
எங்கள் ஐயனே வா வா வா!

See Also  Ganesha Saranam Saranam Ganesha In Tamil – கணேஷ சரணம் சரணம் கணேஷா