Sivarchana Chandrika – Dvarabalar Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – துவாரபாலர் பூஜை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதுவாரபாலர் பூஜை பின்னர் தன்னை அஸ்திரங்களாற் செய்யப்பட்ட கூட்டின் மத்தியில் இருக்கிறவனாகப் பாவனைசெய்து பிருதிவிமுதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களையும் கடந்தவனாகப் பாவித்து சிவபூஜைக்குரிய விடத்தை நான்கு கோணமுடைய சதுரமாகவும், சிவந்தவர்ணமான சுத்தவித்தியா சொரூபமாகவும், பாவனை செய்து போக மோக்ஷங்களில் விருப்பமுள்ளவன் கிழக்கு வாசலில் துவாரபாலர்களை அருச்சிக்க வேண்டும். கீர்த்தி, விஜயம், சௌபாக்கியம் என்னுமிவைகளில் இச்சையுள்ளவன் தெற்கு வாயிலிலும், மோக்ஷத்தில் மாத்திரம் … Read more

Sivarchana Chandrika – Samanyarkkiya Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – சாமான்னியார்க்கிய பூஜை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைசாமான்னியார்க்கிய பூஜை பின்னர் சாமான்னியார்க்கிய பாத்திரத்தை அஸ்திரமந்திரத்தால் சுத்திசெய்து விந்துஸ்தானத்திலிருந்து பெருகுகின்ற அமிர்தமாகப் பாவிக்கப்பட்ட சுத்தஜலத்தால் ஹாம் இருதயாய வெளஷடு என்னும் மந்திரத்தை உச்சரித்துப் பூர்த்திசெய்து ஹாம் இருதயாய நம: என்னும் மந்திரத்தால் ஏழுமுறை அபிமந்திணஞ் செய்து, கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து சந்தனமிட்டு புஷ்பத்தாலருச்சித்து தேனுமுத்திரை காட்டல் வேண்டும். இந்த சாமான்னியார்க்கிய ஜலமானது சிபெருமானல்லாத ஏனைய துவாரபாலர் முதலியோருக்கு உபயோகம்.

Sivarchana Chandrika – Anganiyasam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அங்கநியாசம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஅங்கநியாசம் வலது கைக்கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்சிவாசனாய நம: என்று உச்சரித்துக்கொண்டு, தேகத்தின் மத்தியிலாவது அல்லது இருதயத்திலாவது மூலாதாரத்திலிந்துண்டாண வெண்மையான சிவாசன பத்மத்தை நியாசஞ செய்து ஓம் ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கிழங்கிருக்கும் நாபி முதலாகாவாவது இருதயமுதலாகவாவது புருவ நடுவரை தேஜஸ் சொரூபமான சிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து, நான்கு விரல்களையும் மடக்கி முஷ்டி செய்து கட்டைவிரலால் ஈசானமூர்த்தாய … Read more

Sivarchana Chandrika – Karaniyasam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – கரநியாசம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைகரநியாசம் இடதுகையையும் இடதுகையின் பின்பக்கத்தையும் மணிக்கட்டு முதற்கொண்டு வலதுகையினால் ஹ: அஸ்திராயபட் என்ற மந்திரத்தை உச்சரித்துத் துடைத்து, இருகைகளிலும் சந்தனமிட்டு அஸ்திர மந்திரத்தால் இருமுறை துடைத்து அதே மந்திரத்தால் வலதுகையையும் அதன் பின் பக்கத்தையும் இடதுகையால் ஒருமுறை துடைத்து இருகைகளையும் மணிக்கட்டுவரை அஸ்திர மந்திரத்தின் தேஜஸால் வியாபிக்கப்பட்டனவாகப் பாவித்து இருகைகளையும் சம்புடம்போல் மூடி, இரண்ட கட்டைவிரல்களில் மத்தியில் அமிர்தமயமான சத்திமண்டலத்தைத் தியானித்து … Read more

Sivarchana Chandrika – Sakalikarana Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – சகளீகரண முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைசகளீகரண முறை பின்னர் காநியாச அங்கநியாசரூபமான சகளீகரணம் மூன்று வகைப்படும். அவை வருமாறு: – சிருட்டிநியாசரூபம், திதி நியாசரூபம், சங்கார நியாசரூபமென மூவகைப்பட்டு முறையே கிரகஸ்தர்களுக்கும், பிரமசாரிகளுக்கும், வானபிரஸ்த சன்னியாசிகளுக்கும் உரியனவாகும். இவற்றுள், சிருட்டி நியாச ரூபமான முறையைக் கூறுதும்.

Sivarchana Chandrika – Uruthirakka Tharana Vithi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – உருத்திராக்கதாரண விதி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:உருத்திராக்கதாரண விதி உருத்திராக்கதாரணமும் விபூதிதாரணம் போலச் சிவ பூசையில் எப்பொழுதுந் தரிக்கவேண்டும். பிராமணர் முதலிய ஜாதியார் முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் வர்ணங்களையுடைய உருத்திராக்கங்களைத் தரிக்கவேண்டும். சொல்லப்பெற்ற வர்ணங்களையுடைய உருத்திராக்கங்கள் கிடையாவிடில் பிராமணர் நான்கு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். க்ஷத்திரியர் செம்மை முதலிய மூன்று வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். வைசியர் பொன்மை … Read more

Sivarchana Chandrika Thiripundara Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரிபுண்டர முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:திரிபுண்டர முறை திரிபுண்டரத்தை நான்கு வருணத்தவரும் முறையே ஏழு, ஐந்து, நான்கு, மூன்றங்குலப் பிரமாணமாகத் தரிக்கவேண்டுமென்றும், அல்லது அனைவரும் லலாடம், இருதயம், கை ஆகிய இவைகளில்நான்கு அங்குல அளவாகவும், ஏனைய அவயவங்களில் ஓரங்குல அளவாகவும், தரிக்கவேண்டுமென்றும் பல ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், அவற்றுள் முன்னோரனுட்டித்து வந்த ஒரு முறையைக் கொண்டு லலாட முதலிய தானங்களில் சுட்டுவிரல், நடுவிரல், அணிவிரல், என்னுமிவைகளால் திரிபுண்டரதாரணஞ் … Read more

Sivarchana Chandrika Vibuthi Snana Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – விபூதிஸ்நான முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:விபூதிஸ்நான முறை பசு, பிராமணர், தேவதை, அக்கினி, குரு, வித்தியாபீட மென்னும் இவற்றின் சன்னிதியை நீக்கி, மிலேச்சர், சண்டாளன் செய்நன்றி மறந்தவன் ஆகிய இவர்களுடைய பார்வையில் இராமல், நடைபாதையாகவில்லாத சுத்தமான இடத்தில் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் முறையே ஒரு பலம், ஒன்றரைப் பலம், இரண்டு பலம், இரண்டரைப் பலம் அளவுள்ளதாகவாவது … Read more

Sivarchana Chandrika – Snanamurai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்னானமுறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:ஸ்னானமுறை நீரில் மூழ்கி ஸ்னானஞ்செய்யமுடியாத சமயங்களில் கழுத்து வரையாயவது, இடுப்பு வரையாவது, முழங்கால் வரையாவது நீரால் சுத்தஞ் செய்து, ஈச வஸ்திரத்தால் சுத்தம் செய்யப்படாத அங்கங்களைத் துடைத்து, வேறு வஸ்திரந்தரித்து ஆசமனஞ் செய்து பின்னர் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வலது கால் கட்டை விரலிலிருந்து உண்டான அக்கினியால் தேகத்திலுள்ள வெளி அழுக்கு மாத்திரம் நீங்கினதாகப் பாவித்து அக்கினியின் சம்பந்தத்தால் … Read more

Sivarchana Chandrika – Vibuthiyin Vagai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – விபூதியின் வகை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:விபூதியின் வகை கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும். வனத்தில் … Read more