Kadu Malai Kadanthu Vanthom Ayyappa In Tamil

॥ Kadu Malai Kadanthu Vanthom Ayyappa Tamil Lyrics ॥

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா
காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா)
வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி
வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா)
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே

ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள்
பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள்
பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ
ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை)

நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா ( x 2 )
வேலவனின் அருமைத் தம்பி காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா (காடுமலை)

மணிகண்டா உன் கருணை அமுதமப்பா உன்
புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா
மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா x2
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே (காடுமலை)
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா

See Also  Sri Shabarigirish Ashtakam In Bengali