Ponal Sabarimala Kettal Saami In Tamil

॥ Ponal Sabarimala Kettal Saami in Tamil Lyrics ॥

சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்
சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

போனால் சபரிமலை கேட்டால் சாமி சரணம்
பார்த்தால் ஐயனை பார்க்க வேண்டும் நாம்

பார்த்தால் ஐயப்பனை பார்க்க வேண்டும். (போனால் )

மனம் திறந்தால், உள்ளம் நினைத்தால்
வாய் சொன்னால், கதி என்றால் அந்த
“சாமி சரணம்” என்ற ஒன்றே நிலைக்க வேண்டும்
சாமி சரணம் என்ற ஒன்றே நிலைக்க வேண்டும். (போனால் )

உள்ளத்தில் இருப்பதை மெல்லத் தெளித்தால்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
வெள்ளப் பெருக்கத்தைப் போல் ஐயப்பன் புகழ்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளம் மேடுதனைப் பார்த்து நடந்தால்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
கள்ளம் அற்றவன் காத்து ரக்ஷிப்பான்
சாமி சரணம் ஐயப்ப சரணம். (போனால்)

பம்பை நதியில் மூழ்கி குளித்து
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சிந்தையில் ஐயன் ஐயப்பனையே நினைந்து
சாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐந்து மலை ஏறி மேனி சிலிர்த்து
சாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்பன் மெய்யப்பன் தன்னருள் கண்டு
சாமி சரணம் ஐயப்ப சரணம். (போனால் )

See Also  Vamsa Vrudhi Kara Durga Kavacham In Tamil