Sivarchana Chandrika – Aachamana Vithi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆசமன விதி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை:
ஆசமன விதி

பின்னர், சரீரத்திலுள்ள முப்பத்தைந்து தத்துவங்களின் சுத்தியின் பொருட்டுச் சிந்மாத்திர ஆசமனஞ் செய்யவேண்டும். செய்யுங்காலத்துச் சுவர்ணநிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சுருக்கு, குண்டிகை, என்னுமிவைகளைத் தரித்திருக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும் ஆன்மதத்துவருபமாயுமுள்ள பிரமாவைத் தியானஞ் செய்கிறேனென்று ஆன்மதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹாம் ஆத்மதத்துவாயஸ்வதா என்று முதலாவது ஆசமனஞ் செய்ய வேண்டும். இதனால் தன் சரீரத்தில் பிருதிவி முதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தியடைந்ததாகப்பாவிக்க வேண்டும்.

பின்னர், நீலநிறமுடையவராயும், சக்கரம், பாணம், தாமரை, சின்முத்திரை, சங்கம், வில்லு, கமண்டலம், அபயமுத்திரை என்னும் இவைகளையுடைய எட்டுக்கைகளையுடையவராயும், ஒரு முகத்தையுடையவராயும் உள்ள விஷ்ணுவை வித்யாதத்துவ ரூபமாகத் தியானஞ் செய்கிறேனென்று வித்தியாதத்துவத் தியானத்தைச் செய்து, ஹிம் வித்தியா தத்துவாய ஸ்வதா என்று இரண்டாவது ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சுத்த வித்தை, ஈசுவரம், சதாசிவம் என்னும் மூன்று தத்துவங்களும் சுத்தியடைந்ததாக பாவிக்கவேண்டும்.

பின்னர், படிக நிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சூலம், கமண்டலமென்னும் இவற்றைத் தரிக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், ஐந்து முகங்களையுடையவராயும், உள்ள உருத்திரனைச் சிவதத்துவ ரூபமாகத் தியானம் செய்கிறேனென்று சிவதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹ§ம் சிவதத்துவாயஸ்வதாயென்று ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சத்திதத்தவம் சுத்தியடைந்ததாகப் பாவிக்கவேண்டும்.

பின்னர், அஸ்திரமந்திரத்தால் உதட்டை இருமுறை துடைத்து, ஹிருதயமந்திரத்தால் நேத்திரம் முதலியவற்றைத் தொடல்வேண்டும். மற்ற அந்தந்தத் தேவதைகளின் தியானங்களை முன்போல் செய்ய வேண்டும். ஆசமனமுறை முடிந்தது.

See Also  Upamanyu Krutha Shiva Stotram In Tamil