॥ சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை:
சிவபூஜையின் முறை
பின்னர், கட்டை விரலை இசானராகவும், அணிவிரலை அமிர்தகலையாகவும் தியானஞ்செய்து, கட்டைவிரலுடன் கூடின அணிவிரலால் கண்களையும், மூக்குகளையும், காதுகளையும், தோள்களையும், இருதயத்தையும், தொப்புளையும், சிரசையும் முறையே சூரியன் சந்தோஷமடையட்டும், விஷ்ணு சந்தோஷமடையட்டும் என்பது முதலாகப்பாவனை செய்துகொண்டே தொடல் வேண்டும்.
அவ்வாறு செய்யுங்காலத்துச் சிவ தேஜசின் சேர்க்கையோடு கூடிய அணி விரலினின்றும் உண்டான அமிர்தப் பிரவாகத்தால் திருப்தியடைந்த கண் முதலியவற்றிற்கு அதிஷ்டான தேவதைகளான சூரியன் முதல் விஷ்ணுவீறாகவுள்ள தேவர்கள், பூசிப்பவனுக்குப் பூசை செய்வதில் சாமர்த்தியத்தை விருத்தி பண்ணுகிறவர்களாக ஆகின்றனர்.