Thannanna Dhenam Thannanna Dhenam In Tamil

॥ Thannanna dhenam Thannanna Dhenam Tamil Lyrics ॥

॥ தன்னன்னா தினம் தன்னன்னா தினம் ॥

பால் அபிஷேகம்- சுவாமிக்கே
நெய் அபிஷேகம்- சுவாமிக்கே
மலர் அபிஷேகம்- சுவாமிக்கே
தேன் அபிஷேகம்- சுவாமிக்கே
சந்தன அபிஷேகம்- சுவாமிக்கே
அவலும் மலரும் – சுவாமிக்கே
முத்திரை தேங்காய் – சுவாமிக்கே
கற்பூர தீபம் – சுவாமிக்கே
காணி பொண்ணு – சுவாமிக்கே
எல்லாம் எல்லாம் – சுவாமிக்கே

தன்னன்னா தினம் தன்னன்னா தினம்
சரணம் ஐயப்பா … சரணம் ஐயப்பா

தன்னன்னா தினம் தன்னன்னா தினம்
சரணம் ஐயப்பா …சரணம் ஐயப்பா
விழியாவும் ஓளியான குருவே என் சுவாமி
உனை பாடும் உயிர் நாதம் சரணம் ஐய்யப்பா
வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா
மனமே உன் மலர் பீடம் சரணம் ஐய்யப்பா
சுத்த சுடர் மணியே – ஐயப்பா
பக்தி பசும் கனியே – ஐயப்பா
பித்த பௌர்நமியே – ஐயப்பா
சித்த குளிர் பனியே – ஐயப்பா
சரணம் ஐய்யப்பா- சுவாமி ஐயப்பா
சரணம் ஐய்யப்பா- சுவாமி ஐயப்பா (தன்னன்னா தினம்)

ஆயிரம் கோடி சூரியன் கூடி
சேர்கின்ற தேதி மகர மா ஜோதி
தீபத்தை தாங்கும் திரியினை போல
அய்யனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே
மூலமும் என்ன நாணரியேன் – சாமி ஐயப்பா
முடிவுகள் என்ன நாணரியேன் – சரணம் ஐயப்பா
வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும் ஐய்யப்பன்
அருள் என நன்கறிவேன்
அருள் விழி மலர் முகம்
அதில் எந்தன் மன சுகம்
இசை எனும் ஏழுஸ்வரம்
எனக்காது புகழ் தரும்
மணிகண்ட மந்திரம்
உலகில் நிரந்தரம்
சுவாமி ஐயப்பா- சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா- சரணம் ஐயப்பா (தன்னன்னா தினம்)

See Also  Narayaniyam Satcatvarimsadasakam In Tamil – Narayaneyam Dasakam 46

ஹரிஹர சுதனே அருள்முகு தவமே
நந்தன வணனே வா வா – சாமி பொன் அய்யப்பா – ஐயனே பொன் ஐயப்பா
கனிஒரு முகமே கிலிஅறு கரமே
கலியுக வணனே வா வா – சாமி பொன் அய்யப்பா – ஐயனே
பொன் ஐயப்பா பக்தி தாமரை முக்தி தேன் துளி தித்திப்பாகியதே
சித்ததால் அதன் பித்தால் தினம் கத்தி கூவியதே
சாமி தின்தகதோம், ஐயப்பா தின்தகதோம்- சாமி தின்தகதோம், ஐயப்பா தின்தகதோம்
விண்ணில் இல்லாத வினையர திருவே
மண்ணில் உண்டான மணிகண்ட குருவே
சுவாமியே……….ஐ.. சரணம் ஐயப்பா

கெண்டை கொட்டவுடன் சிங்கி தட்ட
அது அந்தம் தொட்டு பகிரந்த முட்ட உந்தன்
அன்பு மொட்டு விட துன்பம் விட்டுவிட
இன்னும் கட்டுப்பட இன்பம் வட்டமிட
சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும்
இரு இனம் வலம் வரும் அழகிய திருத்தலம்
ஒரு மலையே குரு மலையே அறிவாய்
அதை அறிந்தால் துயர் இல்லையே பொதுவாய்
சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய்
ஹரிசுதானே அனுதினமும் அருள் தருவாய்…….

சுவாமியே……….ஐ.. சரணம் ஐயப்பா
சாமி அப்பா – ஐயப்பா சரணம் அப்பா – ஐயப்பா
பந்தள ராஜா – ஐயப்பா பம்பா வாசா – ஐயப்பா
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

தன்னன்னா தினம் தன்னன்னா தினம்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா