Ulagangal Yaavum Un Arasaangame in Tamil

॥ Ulagangal Yaavum Un Arasaangame Tamil Lyrics ॥

॥ உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ॥
பாடகர்: டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

{நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2)

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

{மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்} (2)

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

{பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்} (2)

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே

முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே…….

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Ulagangal Yaavum Un Arasaangame in English

Ulagangal Yaavum Un Arasaangame in Tamil
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top