Sivarchana Chandrika – Thegasuththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தேகசுத்தி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தேகசுத்தி

தேக சுத்தியானது சூக்கும தேகசுத்தி தூலதேகசுத்தியென இருவகைப்படும்.

சூக்குமதேகசுத்தியாவது:- சப்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னுமிவ்வெட்டின் ரூபமான சூக்கும சரீரசுத்தியின்பொருட்டு, இருதயம், கண்டம், அண்ணம், புருவநாடு, பிரமரந்திரமென்னும் இவற்றிலிருக்கும் பிரமன் முதலிய காரணபுருடர்களுள் பிரம்மணிசப்தஸ்பரிசௌ பிரவிலாபபயமி (பிரமாவினிடத்தில் சப்த பரிசம் என்னுமிவற்றை ஒடுங்கும்படி செய்கிறேன்.) ரசம் விஷ்ணௌ பிரவிலாபயாமி (இரதத்தை விஷ்ணுவினிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன். ரூபகந்தௌ ருத்திரேபிரவிலாபயாமி, (ரூபம் கந்தமென்னும்மிவற்றை உருத்திரனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) புத்யகங்காரௌத்வீச்வரே பிரவிலாபயாமி (புத்தி அகங்காரமென்னுமிவற்றை ஈசுவரனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) மனஸ்சதாசிவே பிரவிவிலாபயாமி (மனதைச் சதாசிவனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) என்று இவ்வாறு சொல்லிக்கொண்டு சூக்குமசரீரத்தின் அம்சங்களான சப்த முதலியவற்றைப் பிரமன் முதலியோரிடத்தில் ஒடுங்கும்படி செய்யவேண்டும்.

தூலதேகசுத்தியாவது:- தன்னுடைய சரீரத்தில் பாதம் முதல் துவாதசாந்தம் வரையுள்ள தானங்களில் இருக்கும் ஐந்து மகாபூதங்களைப் பின்னர்க் கூறப்படும் தானம், சொரூபம், வர்ணம் என்னுமிவற்றுடன் கூடினவையாகத் தியானஞ்செய்து ப்ருதிவீ மப்சு பிரவிலாபயாமி (பிருதிவியை அப்பில்லயிக்கச் செய்கின்றேன்.) அபோக்நௌ பிரவிலாபயாமி (அப்பை அக்னியில்லயிக்கச் செய்கின்றேன்.) அக்நிம் வாயௌ பிரவிலாபயாமி (அக்கினியை வாயுவில் லயிக்கச்செய்கின்றேன்.) வாயுமாகாசே பிரவிலாபயாமி (வாயுவை ஆகாயத்தில் லயிக்கச் செய்கின்றேன்.) ஆகாசம் பராசத்தௌ பிரவிலாபயாமி (ஆகாசத்தைப் பராசக்தியில் லயிக்கச் செய்கின்றேன்.) பராசத்திம் பரசிவே பிரவிலாபயாமி ( பராசக்தியைப் பரசிவத்தில் லயிக்கச் செய்கின்றேன்.) என்று சொல்லிக்கொண்ட அவ்வாறே பாவனை செய்யவேண்டும். இது தத்தமக்குக் காரணங்களான அப்பு முதலியவற்றில் பிருதிவி முதலியவற்றை லயிக்கச்செய்வதான பூதசுத்தியாகும்.

மற்றொன்றான தூலதேக சுத்தியோவெனின், அதனதன் குணங்களை லயிக்கச்செய்யும் ரூபமாயுள்ளது. இந்தச் தூலதேக சுத்தி தனித்தனி சுத்திசெய்தல் ரூபமாயும், ஒன்றாலொன்றைச் சுத்தி செய்தல் ரூபமாயும் இருவகைப்படும். அவற்றுள், தனித்தனி சுத்திசெய்தல் ரூபமானது குணங்களை லயிக்கச் செய்வதாகும். அது வருமாறு:-

பாதம் முதற்கொண்டு முழங்கால்வரை சதுரச்சிர அளவாயும், பொன் வர்ணமாயும், கடினசுபாவமாயும், வச்சிரத்தாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், பார்த்திவ பீஜமானலம் என்பதுடன் கூடின ஹாம் என்னும் இருதய பீஜத்துடன் கூடினதாயும், காரணேசுவரரான பிரமாவால் அதிட்டிக்கப் பட்டதாயும், நிவிருத்திகலாரூபமாயுமிருக்கும் பார்த்திவ மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்து ஹ்லாம் நிவிருத்தி கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு ஐந்து உத்காதங்களால் பிருதிவியினுடைய கந்தம், இரதம், உருவம், பரிசம், சத்தம் என்னுமிந்தக் குணங்களைத் துரத்த வேண்டும்.

பின்னர் முழங்கால் முதல் நாபிவரை பாதிச் சந்திரனுடைய சொரூபம் போல் சொரூபமுள்ளதாயும், வெண்மை வர்ணமுடையதாயும், நிகழ்ச்சி சுபாவமாயும், பதுமத்தாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், வம் என்னும் ஜலபீஜத்துடன் கூடின ஹீம் என்னும் சிரோபீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான விட்டுணுவாலதிட்டிக்கப் பட்டதாயும், பிரதிட்டாகலாரூபமாயுமிருக்கும் அப்புமண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்து ஹ்வீம் பிரதிட்டாகலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து நான்கு உத்காதங்களால் அப்புவினுடைய இரதம், உருவம், பரிசம், சத்தமென்னுங்குணங்களை நீக்கவேண்டும்.

See Also  Alokaye Sri Balakrishnam Stotram In Tamil

பின்னர் நாபிமுதல் கண்டம்வரை மூன்று கோணமாயும், சிவந்த வர்ணமாயும், சுடும் சுபாவமாயும், சுவஸ்திகபந்தத்தால் அடையாளஞ் செய்யப்பெற்றதாயும், ரம் என்னும் அக்கினி பீஜத்துடன் கூடின ஹ¨ம் என்னும் சிகாபீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான உருத்திரரால் அதிட்டிக்கப்பட்டதாயும், வித்தியாகலாரூபமாயுமிருக்கும் அக்கினி மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனைசெய்து ஹ¨ம் வித்தியாகலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து மூன்று உத்காதங்களால் அக்கினியினுடைய உருவம், பரிசம், சத்தமென்னுங் குணங்களை நீக்கவேண்டும்.

பின்னர் கண்டமுதல் புருவநடுவரை ஆறு கோணமாயும், கருமை வர்ணமாயும், சலனசுபவமாயும், ஆறு விந்துவால் அடையாளஞ் செய்யப்பட்டதாயும், யம் என்னும் வாயு பீஜத்துடன் கூடின ஹைம் என்னும் கவச பீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான மகேசுவரரால் அதிட்டிக்கப்பட்டதாயும், சாந்திகலாரூபமாயுமிருக்கும் வாயு மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு பாவனைசெய்து ஹ்யைம் சாந்தி கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து இரண்டு உத்காதங்களால் வாயுவினுடைய பரிசம், சத்தமென்னுங்குணங்களை நீக்க வேண்டும்.

பின்னர் புருவ நடுமுதல் துவாதசாந்தம் வரை வட்டமாயும், புகைவர்ணமாயும், வெளிசுபாவமாயும், விந்து சத்திகளாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், ஹம் என்னும் ஆகாச பீஜத்துடன் கூடின ஹ: என்னும் அஸ்திர பீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான சதாசிவனால திட்டிக்கப்பட்டதாயுமிருக்கும் ஆகாசமண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனைசெய்து ஹெளம் சாந்தியதீத கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து ஒரு உத்காதத்தால் ஆகாசத்தினுடைய சத்தகுணத்தை நீக்கவேண்டும்.

இந்தப் பிருதிவி முதலிய மண்டலங்களை இருதயம், கண்டம், அண்ம், புருவநடு, பிரமரந்திரங்களில் இருப்பவையாகவாவது பாவனை செய்து சுத்திசெய்ய வேண்டும். இது தனித்தனி சுத்தி செய்யும் முறையாகும்.

இனி ஒன்றாலொன்றைச் சுத்திசெய்யும் முறை வருமாறு:-

பிருதிவி முதலிய எல்லா மண்டலங்களையும் சுத்தி செய்யுமிடத்து அவற்றைப் பாதமுதல் சிரசுவரையுமுள்ள அங்கங்களில் வியாபித்திருப்பதாகப் பாவனை செய்யதல் வேண்டும்.

பிருதிவியைச் சுத்திசெய்யுமிடத்து அதனுடைய ஐந்து குணங்களையும் நீக்கிய பின்னர் பிருதிவியைத் தனக்குவிரோதமான வாயுவினால் வெல்லப்பட்டதாயும், வாயுவின் சொரூபம் போல் சொரூபத்தை யுடையதாயும் அவ்வாறே வாயுவைச் சுத்திசெய்யுமிடத்து அதனைத் தனக்கு விரோதமான பிருதிவியினால் வெல்லப்பட்டதாயும், பிருதிவியின் சொரூபம் போல் சொரூபத்தையுடையதாயும் பாவனை செய்யவேண்டும்.

See Also  Ekashloki Ramaya Nama 1 In Tamil

இவ்வாறே ஜலம் அக்கினி என்னுமிவற்றையும் அவ்வவற்றின் குணங்களை நீக்கியபின்னர் தமக்கு விரோதமான அக்கினி ஜலங்களால் வெல்லப்பட்வையாயும், அக்கினி ஜலமென்னுமிவற்றின் சொரூபத்தையுடையவையாயும் பாவனை செய்யவேண்டும்.

ஆகாசத்தின் குணத்தை நீக்கியபின்னர் ஆகாசத்தைத் தனது குணத்திற்கு விரோதமான நித்தியத்வம், வியாபகத்துவம், சுத்தத்துவ முதலிய குணங்களுடன் கூடின பராசத்தி சொரூபமான பரமாகாசத்தால் செல்லப்பட்டதாயும், அந்தப் பரமாகாயத்தின் சொரூபத்தையடைந்ததாயும், சுத்தமான படிகம்போல் நிர்மலமாயும் பாவனை செய்தல் வேண்டும்.

இவ்வாறு மகா பூதங்களைத் தனித்தனி சுத்திசெய்தலாலும், ஒன்றாலொன்றைச் சுத்தி செய்தலாலும் குணங்களின் குறைவால் பலவீனமான சத்தியையுடைய பூதங்களின் கூட்டரூபமான சரீரத்தின் மெலிவைப் பாவனை செய்து காலிலுள்ள கட்டை விரல்களினின்றும் கிளம்பினதாயும், சிவசத்தியாலதிட்டிக்கப்பட்ட தாயுமிருக்கும் காலாக்கினியால் ஹ: அஸ்திராய ஹும்பட்என்னும் மந்தித்தை உச்சரித்து சரீரத்தை எரிக்கப்பட்டதாயும், மீதமில்லாதயும், நிவிருத்தி முதலிய கலைகளை மாத்திரம் மீதமாக வுடையதாயும், அல்லது சரீரத்திலுள்ள தோஷம் மாத்திரம் கெடுக்கப்பட்டதாயுமாகவாவது பாவனை செய்து துவாத சாந்தத்தானத்திலிருக்கும் சத்திமண்டலத்திலிருக்கும் பெருகும் அமிர்தப் பிரவாகத்தால் சரீரத்தை நனைக்க வேண்டும்.

இவ்வாறு சரீரத்தை மெலிவடையும்படி செய்வதற்£க மேலே கூறியவாறு சக்திக்குத் தக்கபடி சரீரத்தை உண்டுபண்ணும் பூதங்களின் குணங்களை நீக்கித்தூல சரீரத்தை ஆலமரமாகத் தியானஞ் செய்யவேண்டும். எவ்வாறெனில், பிருதிவி முதலிய ஐந்து பூதங்களாகின்ற வித்துக்களுடன் கூடியதாயும், மாயையாகிய பூமியில் ஊன்றப்பட்டதாயும், தர்ம அதர்மமென்னும் வேருடன் கூடினதாயும், இந்திரியங்களென்னும் பக்கக்கிளைகளுடன் கூடினதாயும், சுத்த முதலிய விஷயங்களைப் பகுத்தறிதலென்னும் தளிர்களுடன் கூடினதாயும், மனத்தின் சங்கற்பக் கூட்டமென்னும் புட்பங்களையுடையதாயும், சுகதுக்கரூபமான பலத்தையுடையதாயும், புருடனாகிய பறவையால் அனுபவிக்கத் தகுந்ததாயும், மேலே வேரும் கீழே கிளையுமுடையதாயும் இருக்கின்ற ஆலவிருக்ஷமாகத் தியானஞ செய்துகொண்டு, பிராணயாமஞ் செய்து, ஆறுமாத்திரையையுடைய பூரகத்தின் முன் பகுதியால் ஹ்லாம் என்னும் மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்து இலை புஷ்பம் பழமென்னும் இவைகள் நீங்கினதாயும், அசவைற்றதாயும் பாவனை செய்து பூரகத்தின் பின் பகுதியால் ஹ்வீம் என்னும் மந்திரத்தை நான்கு முறை உச்சரித்து, பளபளப்பான பத்திரம் புஷ்பம் பழமென்னுமிவற்றுடன் கூடினதாகப் பாவனை செய்து, ஒரே உத்காதத்தில் ஹ்ரூம் என்னும் மந்திரத்தின் மூன்று உச்சாரணங்களுடன் பன்னிரண்டு மாத்திரையையுடைய கும்பகத்தால் இடது கால்கட்டை விரலினின்றும் உண்டான காலாக்கினியால் உலர்ந்ததாயும், எரிக்கப்பட்டதாயும் பாவனைசெய்து ஹெவம் என்னும் மந்திரத்தின் இரண்டு உச்சாரணங்களுடன் கூடின ரேசகத்தின் முன்பகுதியால் நீரானதாகவும், திக்குக்களில் சிதறினதாகவும் பாவித்து ரேசகத்தின் பின் பகுதியால் ஹெளம் என்னும் அக்ஷரத்தை ஒரு முறை உச்சரித்து படிகம்போல் நிர்மலமாயும், சுத்தமான ஆகாசம்போல் சொரூபத்தையுடையதாயும் சிந்தித்து, அமிர்தத்தால் நனைந்ததாகப் பாவிக்க வேண்டும்.

See Also  Sri Ganapathi Thalam In Tamil

இவ்வாறு தேகதகனத்தைச் செய்து குறிக்கப்பட்ட எண்களையுடைய உத்காதங்களால் அவ்வவற்றின் குணங்கள் நீங்கும் வரையாவது அந்தந்தக் குணங்களை நீக்கும் பாவனையால் பிருதிவி முதலியவற்றை பந்தத்தினின்றும் நீங்கினவையாக அனுசந்தானஞ் செய்து, அந்தந்தத்தானங்களில் வாயுமனமென்னுமிவை நிலைக்கும் வரையாவது பூதசுத்தியைச் செய்யவேண்டும்.

உத்காதமென்பது, இதனால் நீக்கப்படுகிறது என்னும் பொருள் குறிப்பது. அது இவ்விடத்தில் பூதகுணங்களையும் அவற்றின் அசுத்தியையும் நீக்குங்கருவியைக் குறித்தது. அஃதாவது அந்தந்த கலாமந்திரங்களின் உச்சாரணத்தை முன்னிட்டு பூரகத்தைச் செய்து சுழுமுனா நாடி வழியாகப் பிராணவாயுவைத் துவாதசாந்தம் வரை உயரே சேர்க்கும் ரூபமான கிரியை.

இந்தக் கிரியையானது பூரகஞ்செய்தபின் கும்பகஞ்செய்யுங் காலத்தில் பிராண வாயுவை உயரே செல்லும்படி செய்து, பின்னர் அந்தப் பிராண வாயுவை வலது நாடி வழியாக ரேசகம் வரை திருப்புவது. இவ்வாறு ஒவ்வொரு உத்காதத்திலும் பூரகம் கும்பகம் ரேசகமென்னும் மூன்று பிராணாயாமங்கள் சம்பவிப்பதால் பிருதிவியில் ஐந்து உத்காதங்கள் சம்பவிப்பது பற்றிப் பதினைந்து பிராணாயாமங்கள் சம்பவிக்கின்றன. ஜலத்தில் நான்கு உத்காதங்களாதலின் பன்னிரண்டு பிராணாயாமங்களும், அக்கினியில் மூன்று உத்காதங்களாதலின் ஒன்பது பிராணாயாமங்களும், வாயுவில் இரண்டாதலின் ஆறு பிராணாயாமங்களும் ஆகாயத்தில் ஒன்றாதலின் மூன்று பிராணாயாமங்களும் சம்பவிக்கின்றன.

ரேசகமுதலிய ஒவ்வொரு பிராணாயாமத்திலும் பன்னிரண்டு மாத்திரையுடைய கால அளவுண்டு. ஆகையால் மூன்று பிராணாயாமங்கொண்ட ஒவ்வொரு உத்காதமும் முப்பத்தாறு மாத்திரையுடைய கால அளவுள்ளதாக ஆகின்றது. அல்லது தரிப்பதற்காக ஏற்பட்ட கும்பகப் பிராணாயாமத்திற்கு மாத்திரம் பன்னிரண்டு மாத்திரையான கால அளவின் நியமமுண்டு. பூரகம் ரேசகம் என்னுமிவற்றிற்கு இஷ்டம்போல் காலத்தைக் கொள்ளலாம்.

மாத்திரையாவது வேகமின்றியும் தாமதமின்றியும் இருமுழங்கால்களையும் கையாற் சுற்றி சுடக்கு விடும் நேரமாகும். இது ஒரு மாத்திரை யெனப்படும். மூன்று முறை சுற்றவேண்டுமென சித்தாந்த சேகரமுதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. அந்த மூன்று முறையுள் இவ்விடத்துக் கூறிய ஒரு முறை சுற்றுதல் அதமம். இரண்டு முறை சுற்றுதல் மத்திமம். மூன்று மறை சுற்றுதல் உத்தமம்.

இவ்வாறு கால அளவுடன் கூடின பிராணவாயுவைத் தொழிற்படுத்தும் ரூபமான உத்காதத்தைக் கொள்ளாது அவ்வவற்றின் குணங்களுக்குச் சமமான எண்ணையுடைய கலாமந்திரத்தை உச்சரித்தலால் அவ்வவற்றின் குணங்கள் நீங்கினதாகத் தியானிக்கும் ரூபமாகவாவது ஒரு முறை அந்தந்தக் கலாமந்திரத்தை உச்சரித்தலால் அந்தந்தக் கலை, தத்துவம், புவனம், வர்ணம், பதம், மந்திரமென்னும் இவற்றுடன் கூடின பிருகிவி மண்டலமுதலிய மண்டலங்களில் தன்னைக்குறித்துள்ள பிரதி பந்தத்தின் நிவிருத்தியை அனுசந்தானஞ் செய்தல் ரூபமான பாசச்சேத ரூபமாகவாவது பூதசுத்தியைச் செய்ய வேண்டும்.