Sivarchana Chandrikai – Neivethiyam Seiyum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் செய்யும் முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைநைவேத்தியஞ் செய்யும் முறை நைவேத்தியத்திற்கு விரீகியென்னும் செந்நெல்லரிசி, சாலியென்னும் சம்பாநெல்லரிசி, பிரியங்கு என்னும் தானியத்தினரிசி, நீவாரமென்னும் வனநெல்லினரிசி, கோதுமையினரிசி, மூங்கிலரிசி, வால்நெல்லரிசி யென்னுமிவை மேலானவையாம். அவற்றுள், செந்நெல் அரிசி அதமம். சம்பாநெல்லரிசி மத்திமம். ஏனைய அரிசிகள் உத்தமம். அவற்றுள்ளும் பிரியங்குவின் அரிசியும், நீவாரமென்னும் வனநெல்லரிசியும், கோதுமையரிசியும், மூங்கிலரிசியும் முறையே நூறு, ஆயிரம், இலட்சம், அநந்தமென்னும் பலன்களை யுடையனவாய் ஒன்றுக்கொன்று … Read more

Sivarchana Chandrikai – Naangaavathu Aavarana Pujai In Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நான்காவது ஆவரண பூசை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைநான்காவது ஆவரண பூசை இந்திராய சசீசகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், அயிராவதத்தில் ஏறியிருப்பவரும், வச்சிரம் அங்குசம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையவரும், இந்திராணியுடன் கூடியவருமான இந்திரனைப் பூசிக்கின்றேன். அக்னயே சுவாகாசகிதாய நம: செம்மை வர்ணத்தையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சத்தி வரமென்னுமிவற்றைத் தரிப்பவரும், ஆட்டை வாகனமாகவுடையவரும், சுவாகாதேவியினுடன் கூடியவருமாகிய அக்கினி தேவரைப் பூசிக்கின்றேன். யமாய காலகண்டீ சகிதாய நம: கருமை வர்ணத்தையுடையவரும், தண்டம் பாசம் … Read more

Sivarchana Chandrikai – Mundraavathu Aavarana Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – மூன்றாவது ஆவரண பூசை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைமூன்றாவது ஆவரண பூசை குண்ட சகிதாய நந்திகேசுவராய நம: செம்மை வருணத்தையுடையவராயும், திரிசூலம், அக்கமாலை, வரம், அபயம் என்னுமிவற்றைக் கையிலுடையவராயும், குண்டலினியுடன் கூடினவராயும் இருக்கும் நந்தியைப் பூசிக்கின்றேன். பத்மினீ சகிதாய மகாகாளாய நம: பொன்மையும் கருமையும் கலந்த நிறமுடையவராயும், செம்மையான மீசையையும் தலைமயிரையுமுடையவராயும், சூலங் கபாலம் கட்கம் கேடம் என்னுமிவற்றைத் தரிப்பவராயும், பத்தினியுடன் கூடினவராயுமிருக்கும் மகாகாளரைப் பூசிக்கின்றேன். ஹ்ராதினீசகிதாய … Read more

Kedhara Vrata Pujai Procedure And Slokam In Tamil

॥ கேதார விரத பூஜை ॥ விக்நேச்வர பூஜை:(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்। ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்॥ அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி மஹா கணபதிம் ஆவாஹயாமி மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி ” ” அர்க்யம் ” ” ” பாத்யம் ” ” ” ஆசமநீயம் ” ” ” ஔபசாரிகஸ்நாநம் ” ” … Read more

Sivarchana Chandrikai – Bojana Vithi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – போஜன விதி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபோஜன விதி ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்து கை, கால்களைக் கழுவி ஆசமனம் செய்து ஈன சாதியர்களான தீக்ஷை பெறாதவர்களைத் தம்முடைய பந்திக்கு வரவொட்டாது விலக்கிக் கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடின சிவபக்தர்களுடன் போசனம் செய்யும் இடத்தை அடைந்து பீடத்தில் கிழக்கு … Read more

Sivarchana Chandrikai – Ashta Pushpa Archanai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அஷ்ட புஷ்ப அர்ச்சனை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஅஷ்ட புஷ்ப அர்ச்சனை இவ்வாறு கூறப்பட்ட நியமங்களுடன் ஐந்து உபசாரங்களையும் செய்ய முடியாதவன் அட்ட புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். அது வருமாறு, – சுத்தமான மனதுடன் ஒரு புஷ்பத்தை ஆசன நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இன்னுமொரு புஷ்பத்தை இருதயத்தால் மூர்த்தியைத் தியானிக்கும் நிமித்தமாகச் சமா¢ப்பிக்க வேண்டும். பின்னர் ஐந்து புஷ்பங்களை ஐந்து அங்கங்களையும் தியானிக்கும் நிமித்தமாகச் சமர்ப்பிக்க … Read more

Sivarchana Chandrikai – Guru Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – குருபூசை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைகுருபூசை பின்னர், தமது பீடத்திலிருக்கும் குருவையடைந்து அவருடைய பாதங்களைச் சுத்திசெய்து பரமசிவன் என்னும் புத்தியுடன் சந்தனம் முதலியவற்றால் பூசித்து, மூன்று புஷ்பாஞ்சலிகள் செய்து, சாஷ்டாங்கமாக மூன்றுமுறை நமஸ்கரித்து எழுந்து, பூமியில் முழங்கால்களை வைக்கொண்டும் இருகைகளைக் குவித்துக்கொண்டும் குற்றங்களைப் பொறுத்தருளர் வேண்டுமெனப்பிரார்த்திக்க வேண்டும். “தேனில் விருப்பமுள்ள வண்டானது சோலையில் ஒரு புஷ்பத்தினின்றும் நீங்கிப் பிறிதொரு புஷ்பத்திற்குச் செல்லுமாறுபோல, ஞானத்தில் விருப்பமுள்ள சீடன் ஒரு … Read more

Sivarchana Chandrikai – Aarathi Samarpikkum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஆரத்தி சமார்ப்பிக்கும் முறை சுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான … Read more

Sivarchana Chandrikai – Agni Kariyam Seiyum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அக்கினிகாரியஞ் செய்யுமுறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஅக்கினிகாரியஞ் செய்யுமுறை இவ்வாறு பரமேசுவரனைத் தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரமுதலியவற்றால் திப்தியடையும்படி செய்து, ஓ சுவாமின்! யான் அக்கினி காரியஞ் செய்கின்றேன் என்று தெரிவித்துப் பரமசிவனிடமிருந்து ஆணையைப்பெற்றுச், சாமான்யார்க்கிய பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அக்கினியிருக்கும் ஓமகுண்டத்திற்குச் சென்று, நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகளால் சுத்தமாயும், ஒருமுழ அளவுள்ளதாயும், மண், மணலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயுமிருக்கும் இடத்தில் அரணிக்கட்டை, சூரியகாந்தமென்னுமிவற்றால் செய்யப்பட்டதாகவாவது, அக்கினிகாரியஞ் செய்பவர் … Read more

Sivarchana Chandrikai – Dheebam Samarpithhal In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தீபஞ் சமர்ப்பித்தல் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதீபஞ் சமர்ப்பித்தல் பின்னர் மூலமந்திரத்தால் விசேஷார்க்கியங் கொடுத்த ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது வட்டத்துடன் கூடிய புஷ்பதீபத்தைச் சமர்ப்பித்து, மூன்று அல்லது ஐந்து ஒட்டைப்பிரமாணமுள்ள நாகதீபம், சக்கரதீபம், பத்மதீபம், புருஷமிருகதீபம், கஜாரூட தேவேந்திர தீபம் என்னும் தீபபாத்திரங்களில் ஏற்றப்பட்ட தீபங்களையும் சத்திக்குத் தக்கவாறு சமர்ப்பித்துப் பின்னர் ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும்.